ஞாயிறு, 15 ஜனவரி, 2023

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ


இலக்கணம் மாறுதோ

இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்

இலக்கணம் மாறுதோ
ஹோ ஹோ ஓ ஓஓ

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏன் இந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ

இலக்கணம் மாறுதோ
ஹோ ஹோ ஓ ஓஓ

என் வாழ்க்கை நதியில்
கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில்

கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்

புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விலக்கி வைப்பாயோ

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை

மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்

ஹா..ஆஅஆஅ..ஹாஆஅ..
ஹாஆஅஹாஆஅ..
இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது
அது என்ன வேடம்
இது என்ன பாடம்

திரைப்படம்:. நிழல் நிஜமாகிறது
நடிப்பு:. கமல்ஹாசன், சுமித்ரா மற்றும் ஷோபா
பாடகர்: SP. பாலசுப்பிரமணியம்

இசை: M.S. விஷ்வநாதன்

பாடல் எழுதியவர்: கண்ணதாசன்

Junior Junior Junior இருமனம் கொண்ட திருமண வாழ்வில்


இருமனம் கொண்ட திருமண வாழ்வில்

இடையினில் நீயேன் மயங்குகிறாய்

இருமனம் கொண்ட திருமண வாழ்வில் 
இடையினில் நீயேன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய்
கரையினில் ஆடும் நாணலே (நாணல் ME ஹி ஹி ஹி)
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகிறாய்

சிற்பம் ஒன்று சிரிக்க கண்டு
இரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக்கூடாதோ
சின்னப்பையன் வயசோ கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய் சேராதோ
Junior Junior Junior

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

Is it அபூர்வ ராகம்?

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்கு தேவை மேகம் என்பாய் 
அவளது தேவை அறிவாயோ
வயலுக்கு தேவை மேகம் என்பாய்
 அவளது தேவை அறிவாயோ
பாட்டை கண்டு ராகம் போட்டேன்
உயிரை கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்க கூடாது

No it bad.  But I am mad
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமை கேள்வி கேட்க்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது ஹ ஹ ஹ ஹ
What கப கப கப ஹ Junior


Junior Junior Junior
இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்

சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலை தேடி ஓடுகின்றாய்
Boss love has no season or even reason.  Shut up
சித்திரை மாதம் மழையை தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலை தேடி ஓடுகின்றாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி 
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி 
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்
அடங்கியவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தவனோ April மாசம்
அடியேன் முடிவை சொல்லக்கூடாதோ 

It's highly idiotic.  No Boss only romantic ஹ ஹ ஹ ஹ
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவை சொல்லி சிரிக்ககூடாதோ ஹ ஹ ஹ ஹ
முடிவை சொல்லி சிரிக்ககூடாதோ

இருமனம் கொண்ட திருமண வாழ்வில் 
இடையினில் நீயேன் மயங்குகிறாய்

இசை:  எம். எஸ். விஷ்வநாதன்

பாடகர்:.  S. P. பாலசுப்பிரமணியம்