திங்கள், 6 ஜூலை, 2020

ஆத்தோர பேரழகி - Lyrics




ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல
ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மணக்குற என்ன இழுக்குற
நீ போகையில

அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச

அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட தாய கட்ட நீதா
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி 
நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

ஆத்தி என் மஞ்சணத்தி
சேவ் வான செங்கலத்தி
உன் கூத்துல ஒரு குருவி தான் இடம் தேடுது
சின்னூண்டு கண்ணொருத்தி
சேந்தொரு கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது

ஓ கணக்கா கண்ண ஏது
பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத
மிச்சம் நீ வார

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி
 நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே

அடியே என் அழகியே
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்

என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி
 நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே


திரைப்படம்  கோலி சோடா 2

பாடியவர்  அச்சு

ஞாயிறு, 5 ஜூலை, 2020

யாரும் விளையாடும் தோட்டம்





டௌ...டடன் டன் டடடட டௌ
டௌ...டடன் டன் டடடட டௌ

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி 
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி 
இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரா பாத்து டோரா போடு

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்

போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி 
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கூடமும் மனிமாடமும் நல்ல வீடு உண்டு
தேடவும் பள்ளு பாடவும் பள்ளிக்கூடமுண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம் தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ள இன்பம் இல்ல
வம்பில்லா வாழ்க்கை என்றால் துன்பம் இல்ல

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரா பாத்து டோரா போடு

ஆத்தி இது வாத்து கூட்டம்
ஆத்தி இது வாத்து கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறத கேளு நீ வேற ஊற பாரு
நான் சொல்லுறத கேளு கொஞ்சம் வேற ஊரபாரு

டோராவ பாத்து போடு ஓலத்தோடு
வேறோரு போயி சேரு நேரத்தோடு

ஆத்தி இது வாத்து கூட்டம்
ஆத்தி இது வாத்து கூட்டம் பாத்தா
 இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறத கேளு நீ வேற ஊர பாரு
நான் சொல்லுறத கேளு 
கொஞ்சம் வேற ஊர பாரு

டௌ...டடன் டன் டடடட டௌ
டௌ...டடன் டன் டடடட டௌ

ஆவியாகி போன நீரும் மேகமாச்சு
மேக நீரும் கீழ வந்து ஏரி ஆச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு
மேடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது
சேராத தாமர பூ தண்ணி போலே
மாறாது எங்க வாழ்வு வானம் போலே

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி 
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி 
இந்த மண்ணு நம்ம பூமி


பாடியவர்கள்  மனோ  &  K.S. சித்ரா

திரைப்படம்      நாடோடி தென்றல்


பதிவிட்டவர்   இரா. சுரேஷ்குமார்







நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதசி,

  
திரைப்படம்   நாயகன்
இசை  இளையராஜா
பாடியவர்கள் K ஜமுனா ராணி. 
  M.S. இராஜேஸ்வரி




நான் சிரித்தால் தீபாவளி ஹோய் 
நாளும் இங்கே ஏகாதசி,
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் 
நாளும் இங்கே ஏகாதசி,
அந்தி மலரும் நந்தவனம் நான் 
அள்ளி பருகும் கம்பரசம் நான்,
நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் 
நாளும் இங்கே ஏகாதசி.....


எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை,
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
வந்தது எல்லாம் போவது தானே 
சந்திரன் கூட தேய்வது தானே,
காயம் என்றால் தேகம் தானே 
உண்மை இங்கே கண்டேன் நானே,
காலம் நேரம் போகும் வா

நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் 
நாளும் இங்கே ஏகாதசி,
அந்தி மலரும் நந்தவனம் நான் 
அள்ளி பருகும் கம்பரசம் நான்,
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் 
நாளும் இங்கே ஏகாதசி......

கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் 
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்,
மீட்டும் கையில் நானோர் வீணை 
வானில் வைரம் மின்னும் வேளை,
காலம் நேரம் போகும் வா....
நான் சிரித்தால் …

நான் சிரித்தால் தீபாவளி ஹோய் 
நாளும் இங்கே ஏகாதசி
அந்தி மலரும் நந்தவனம் நான் 
அள்ளி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் 
நாளும் இங்கே ஏகாதசி......


வடிவமைப்பு    R. சுரேஷ் குமார்